தளபதி விஜய் மகனுக்கு ஜோடியாக நடிக்க ஆசைப்படும் ஜில்லா பட நடிகை.. எந்த நடிகை என்று தெரியுமா .. இதோ யாருனு நீங்களே பாருங்க ..!!

சினிமா

தளபதி விஜய் மகனுக்கு ஜோடியாக நடிக்க ஆசைப்படும் ஜில்லா பட நடிகை.. எந்த நடிகை என்று தெரியுமா .. இதோ யாருனு நீங்களே பாருங்க ..!!

ஜேசன் சஞ்சய் விஜய் தமிழ் நடிகர் விஜய் மற்றும் சங்கீதாவின் மகன் ஒரு இந்திய நடிகர் ஆவார். அவர் 2019 ஆம் ஆண்டு ஜங்ஷன் என்ற குறும்படத்தை இயக்கி தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஒரு குறும்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் முன், 2009 ஆம் ஆண்டு தனது தந்தையின் ‘வேட்டைக்காரன்’ திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார்.

விஜய் நடித்த ’ஜில்லா’ திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் விஜய் மகனுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.நடிகர் விஜயின் மகன் சஞ்சய் விஜய் விரைவில் திரையுலகில் அறிமுகமாவார் என்று கூறப்படுகிறது.கனடா நாட்டில் திரைப்பட படிப்பை முடித்துள்ள சஞ்சையின் திரையுலக எண்ட்ரியை அவரது ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் காத்திருக்கின்றனர்.

விஜய் மகனுக்கு ஜோடியாக ஆசைப்படும் ஜில்லா பட நடிகை….யார் அவர் தெரியுமா?இந்த நிலையில் விஜய் மகன் சஞ்சய் நடிகர் ஆனால் அவருக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என ’ஜில்லா’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ரவீனா தாஹா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ரவீனா தாஹா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் சீசன் 2 சீரியலில் முன்னணி பாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்த நிலையில் விஜயின் மகனுக்கு ஜோடியாக வேண்டும் என்ற இவரின் ஆசை நிறைவேறுமா என்று பார்க்கலாம்.