திருமணம் என்று பார்க்கும் போது நம்மை வியக்க வைக்கும் சம்பவங்கள், எம்மை நகைக்க வைக்கும் சம்பவங்கள் என ஏராளமான காட்சிகள் இருக்கும். அதிலும் மணமக்களை பிடித்து உறவினர்கள் வதைக்கும் காட்சி பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கும்.
மேலும் அந்த வகையில் திருமணத்தில் முக்கிய நிகழ்வான தாலி கட்டும் போது மாப்பிள்ளை தாலியை தவறான பக்கத்தில் பிடித்து கொண்டு மணப்பெண்ணின் கழுத்தில் கட்ட முயற்சிக்கிறார். அவர் என்ன தான் முயற்சி செய்தாலும் கடைசி வரையில் அவரால் தாலியை கட்ட முடியவில்லை.
தாடுமாறிக் கொண்டிருந்த மாப்பிள்ளையை பார்த்து கடுப்பாகிய மணப்பெண் தாலியை இப்படி தான் கட்ட வேண்டும் என சொல்லி கொடுக்கிறது. இதனை அங்கிருந்தவர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த காட்சியை பார்த்த இணையவாசிகள், “ 90ஸ் போல..” என கலாய்த்துள்ளார்கள்…