திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எதிர்நீச்சல் சீரியல் நடிகை!! அவரே வெளியிட்ட புகைப்படம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

சினிமா

பிரபல சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியல் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.  இந்த சீரியலில் 4 பெண்கள் திருமணத்திற்கு பிறகு இவர்கள் அனுபவிக்கும் கஷ்டங்களை தான் தொடர் காட்டுகிறது. கதையில் மிகவும் வெயிட்டான ரோலில் நடித்து வந்த மாரிமுத்து திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டார்.

ஏற்கெனவே இந்த சீரியலில் விறுவிறுப்பிற்கு பஞ்சமே இல்லை. கதையில் ஆதி குணசேகரன் இடம் காலியாக இருக்க அதிரடி மாற்றங்கள் நடந்துள்ளன. கதையில் புதிய கதாபாத்திரம் வர இருப்பதை நேற்று முந்தைய எபிசோடிலேயே ஹின்ட் கொடுத்துள்ளார் இயக்குனர்.

மேலும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்திற்கு அடுத்த வெயிட்டான ரோல் என்றால் நந்தினி கேரக்டர் தான். அந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஹரிபிரியா திடீரென உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் ட்ரிப்ஸ் ஏற்றிய படி இருக்கும் புகைப்படத்தை ஹரிப்பிரியா பதிவிட்டுள்ளதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். அந்த புகைப்படம் இதோ…