திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை சுனைனா!! அவருக்கு என்ன ஆச்சு… விரைவில் மீண்டு பலமாக வருவேன்… என ரசிகர்களுக்கு தகவல்…!!

சினிமா

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை சுனைனா. மேலும் இவர் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, தனது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

மேலும் கடந்த 2005ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான Kumar Vs Kumari என்ற படத்தின் மூலம் திரையுலகில் தனது காலடி தளத்தை பதித்தார் நடிகை சுனைனா. மேலும் இவர் தெலுங்கில் நடித்த படங்கள் அவரது நடிப்பிற்கும், அழகிற்கும் ஏற்ற வகையில் சிறப்பான வரவேற்பைப் பெற்று கொடுத்தது.

மேலும் இதையடுத்து, தமிழில் வெளியான ‘காதலில் விழுந்தேன்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். படத்தில் நடிகை சுனைனாவின் அழகு தமிழ் ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்தது.

இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் தனக்கு கிடைத்த முக்கியத்துவத்தை விட தமிழில் முக்கியத்துவம் கிடைத்ததை உணர்ந்து கொண்ட நடிகை சுனைனா தொடர்ந்து தமிழில் கவனம் செலுத்தி வந்தார்.

அந்த வகையில் மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், திருத்தணி, நீர்ப்பறவை, சமர், வன்மம், தெறி போன்ற படங்களில் நடித்திருந்தார். இறுதியாக இவரது நடிப்பில் வெளியான ரெஜினா படம் போதிய வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில் நிலையில் அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை வெளியிட்டு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளார். இது குறித்த புகைப்படத்தோடு எனக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள் விரைவில் மீண்டும் பலமாக வருவேன்’ என கூறியுள்ளார்.

மேலும் இவரது பதிவை பார்த்த ரசிகர்கள் சுனைனாவுக்கு என்ன ஆனது என்று கேள்வி கேட்டு வருவதோடு அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்றும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்…