திருமணமாகி உடல் எடை கூடி அடையாளமே தெரியாமல் மாறிப்போன பிரபல நடிகை ரீமாசென்! அப்போ இனி அம்மா கதாபாத்திரம் தான் போல!!

திருமணமாகி உடல் எடை கூடி அடையாளமே தெரியாமல் மாறிப்போன பிரபல நடிகை ரீமாசென்! அப்போ இனி அம்மா கதாபாத்திரம் தான் போல!!

Tamil News

தமிழ் சினிமாவில் தற்போது எத்தனையோ பல புதுமுக இளம் நடிகைகள் வந்த போதிலும் 90-களின் காலகட்டத்தில் வலம் வந்த முன்னணி நடிகைகளை இன்றளவும் நம்மால் மறக்க முடியாது. காரணம் அந்த அளவிற்கு அவர்கள் தங்களது நடிப்பு மற்றும் அழகான தோற்றத்தால் இன்றைக்கும் பல இளைஞர்களின் மனதில் கனவு கன்னியாக வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் அந்த காலத்தில் நடித்த பல முன்னணி நடிகைகள் தற்போது இருக்கும் இடமே தெரியாமல் போய் விட்டனர்.

இருப்பினும் அவர்களது படங்கள் மற்றும் நினைவுகள் மக்கள் மத்தியில் நிலையாக இருந்து தான் வருகிறது. அந்த வகையில் பிரபல நடிகர் மாதவன் நடிப்பில் வெளியாகி பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட திரைப்படம் மின்னலே. இந்த படத்தில் மாதவனுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்து தமிழ் மக்களிடையே அறிமுகமானவர் பிரபல முன்னணி நடிகை ரீமா சென்.

தான் நடித்த முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பு மற்றும் அழகால் பலரது கவனத்தை தன் பக்கம் கவர்ந்தார். கொல்கத்தாவை பூர்விகமாக கொண்ட இவர் மும்பையில் கல்லூரி படிப்பை முடித்து மாடலிங் மீது கொண்ட ஆர்வத்தால் பல விளம்பர படங்களில் நடித்து வந்தார். இதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவர் மேற்கொண்டு திரையுலகில் நுழைந்து பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

அது மட்டுமின்றி கதாநாயகியாக மட்டுமில்லாமல் கதைக்கு ஏற்றாற்போல் போல் பல குணசித்திர முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளார். சொல்லபோனால் அந்த காலத்தில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை திறம்பட நடிக்கும் நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இந்நிலையில் தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து வந்த ரீமா சென் கடைசியாக சட்டம் ஒரு இருட்டறை எனும் படத்தில் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து கடந்த 2012-ம் ஆண்டு சிவ் கரன் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் இறங்கி விட்டார். மேலும் இவர்களுக்கு ருத்ரவீர் சிங் எனும் மகனும் உள்ளார் இப்படி இருக்கையில் திருமணத்திற்கு பிறகு முழுவதுமாக சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டு குடும்பத்தை கவனிப்பதில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் இவரது சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரளாகி வருகிறது. அந்த காலத்தில் கட்டழகு ராணியாக வலம் வந்த அம்மிணி தற்போது உடல் எடை அதிகரித்து குண்டாக மாறிபோயுள்ளார். இந்நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் ரீமா சென்னா இது என வாயடைத்து போயுள்ளனர்.