பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் தொகுப்பாளினியாக பணி புரிந்து ரசிகர்களிடையே பிரபலமானவர் வி.ஜே. தியா மேனன். மேலும் இவர் சன் மியூசிக்கில் வி.ஜே வாக தனது தொகுப்பாளர் கரியரை தொடங்கினார்.
அதன் பின் சன் டிவி தொலைக்காட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். மேலும் இவர் நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டு தனது கணவருடன் சிங்கப்பூரில் செட்டிலாகி விட்டார்.
மேலும் நான்கு வருடங்களுக்கு பிறகு தற்போது தியாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.