தமிழ் சினிமாவில் அந்தக் காலத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ரேவதி. இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை ரேவதி மா டலிங் துறையில் நல்ல ஆர்வம் கொண்டவர். இவர் சிறு வயதிலேயே பரத நாட்டியம் போன்ற கலைகளை கற்றார்.
மேலும் இயக்குனர் பாரதிராஜாவின் மண்வாசனை திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ரேவதி முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை பெற்றார். ஒரு கை தியின் டைரி, மௌன ராகம், மறுபடியும், அஞ்சலி போன்ற படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக பிரபலமானார்.
அதன் பிறகு இயக்குனர் அ வதா ரம் எடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் பணியாற்றி வந்தார். தான் நடித்த மருமகள் என்ற திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சுரேஷ் சந்திர மேனன் என்பவரை 1986ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
அதன் பின் இவர்கள் இருவருக்கும் க ருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் 2013ம் ஆண்டு வி வாக ரத்து பெற்று பி ரிந் து விட்டனர். நடிகை ரேவதி 2018ம் ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் தனக்கு 5 வயதில் குழந்தை இருப்பதாகவும் அவருக்கு மஹி என பெயர் வைத்துள்ளதாகவும், டெஸ்ட் டியூப் குழந்தை என்றும் கூறியுள்ளார்.