சினிமாவில் பயணிக்கும் நடிகர்கள், நடிகைகள் தங்களுடன் பழகும் சக நட்சத்திரங்கள் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அவரையே திருமணம் செய்து ரியல் ஜோடிகளாகி விடுவார்கள். அப்படி தான் சமீபத்தில் நடிகர் அசோக் செல்வன் நீண்ட காலமாக கா தலி த்து வந்த நடிகை கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்தார்.
திருமணத்திற்கு முன் ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் இணைந்து நடித்து வந்த அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் செப்டம்பர் 13ல் தமிழ் கலாச்சாரத்தின் படி அவரது சொந்த ஊர் தோட்டத்தில் கல்யாணத்தை முடித்தனர்.
திருமணத்திற்கு பின் நடிப்பாரா கீர்த்தி பாண்டியன் என்ற கேள்வி எழ, குடும்பம் வேற தொழில் வேற என்று கூறி நடிப்பேன் என்று அவரே கூறினார். இந்நிலையில் இருவரும் திருமணத்திற்கு பின் நடிப்பில் மும்முரமாக நடித்து வருகிறார்கள். அசோக் செல்வன் நடிப்பில் சபநாயகன் படம் டிசம்பர் 15ல் வெளியாகவுள்ளது.
நடிகர் கமலின் உதவியாளராக விஸ்வரூபம் படத்தில் பணியாற்றிய சி எஸ் கார்த்திகேயன் இயக்கியுள்ள இந்த படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ள்ளார். அதே சமயம் நடிகை கீர்த்தி பாண்டியனும் கண்ணகி என்ற படத்தில் நடித்துள்ளதால் அப்படமும் டிசம்பர் 15ல் திரையரங்குகளில் வெளிவரவிருக்கிறதாம்.
இப்படி, கணவன் – மனைவி நடிப்பில் உருவாகிய படங்கள் ஒரே நாளில் மோதவுள்ளது எந்தளவிற்கு சாத்தியமாக இருக்கப் போவது என்று சினிமா வட்டாரத்தில் பேசிக்கொண்டு வருகிறார்கள்…