தி டீ ரென பாரதிகண்ணம்மா சீரியல் நடிகைக்கு திருமணம்.. அட மாப்பிள்ளை இந்த பிரபலமா.. வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

சினிமா

தி டீ ரென பாரதிகண்ணம்மா சீரியல் நடிகைக்கு திருமணம்.. அட மாப்பிள்ளை இந்த பிரபலமா.. வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா தொடர் தற்போது பல்வேறு திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இத்தொடரில் ரோஷினி ஹரிப்ரியன் கண்ணம்மாவாக நடித்திருந்தார். சில காரணங்களால் இத்தொடரில் இருந்து விலகி விட்டார்.

தற்போது பாரதி கண்ணம்மா தொடரில் வினுஷா தேவி கண்ணம்மாவாக நடித்து வருகிறார். இருந்தாலும் ரோஷினி ரசிகர்கள் வினுஷாவை கண்ணம்மாவாக ஏற்க மறுக்கிறார்கள். தற்போது ரோஷினி ஹரிப்ரியன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றுள்ளார்.

பாரதிகண்ணம்மா தொடரில் ஆரம்பத்தில் இருந்த சில கதாபாத்திரங்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அவ்வாறு இத்தொடரில் அறிவழகி ஆக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியா நடித்திருந்தார். இந்தக் கதாபாத்திரம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

அதேபோல் ஆரம்பத்தில் சௌந்தர்யாவின் மகளாக ஸ்ருதி சண்முகம் நடித்திருந்தார். இவருடைய மகள் கருப்பாக இருப்பதால் சௌந்தர்யாவுக்கு பிடிக்காதது போன்ற காட்சிகள் அமைக்கப் பட்டிருந்தது. அதன்பின் பாரதி, கண்ணம்மா இருவரின் திருமணத்திற்குப் பிறகு ஸ்ருதி கதாபாத்திரத்தை அப்படியே விட்டு விட்டார்கள்.

ஸ்ருதி சண்முகம் சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் தொடரின் மூலம் அறிமுகமாகி மிகவும் பிரபலமானார். அதன்பிறகு பாரதிகண்ணம்மா, பொம்முக்குட்டி அம்மாவுக்கு என பல தொடர்களில் நடித்துள்ளார். தற்போது இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது.

ஸ்ருதிக்கு வக்கீலாக உள்ள அரவிந்த் என்பவருடன் திருமணம் நடக்க உள்ளது. இவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ருதி வெளியிட்டு உள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மாப்பிள்ளை ஜிம்முக்கு போயி முரட்டு ஆளாக இருப்பார் போல என கூறிவருகின்றனர். அவருடைய ரசிகர்கள் ஸ்ருதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.