தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமாகி விடுகிறார்கள். மேலும் அந்த வகையில் நடிகர் சியான் விக்ரம், அனுஷ்கா செட்டி, அமலா பால், சந்தானம், நாசர் போன்ற பல பிரபலங்கள் நடித்த தெய்வத்திருமகள் திரைப்படத்தில் குழந்தையாக நடித்து அசத்தியவர் நடிகை சாரா அர்ஜுன்.
மேலும் இவர் வட இந்திய நட்சத்திரமாக சினிமா பற்றி தெரிந்த பெற்றோர்களால் தெய்வத்திருமகள் படத்தில் நடித்தார். இந்த படம் மிகப்பெரிய அளவு வரவேற்பு பெற்ற நிலையில் அந்த படத்தின் இயக்குனர் ஏ எல் விஜய்யின் சைவம் படத்தில் லீட் ரோலில் நடிக்க வைத்தார்.
மேலும் அதன் பின் இந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் படங்கள் நடித்து வந்த சாரா அர்ஜுன் தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குட்டி நந்தினியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் குட்டி குழந்தையாக இருந்த சாரா அர்ஜுன் தற்போது வளர்ந்து 17 வயதில் ஆள் அடையாளம் தெரியாமல் மாறி விட்டார். சமீபத்தில் அவர் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வை ரலா கி வருகிறது.