பிரபல நடிகர் அருண் விஜய் குடும்பத்துடன் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. நடிகர் அருண் விஜய் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆரத்தி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு பூர்வி என்ற மகளும், அர்னவ் விஜய் என்ற மகனும் உள்ளனர். மேலும் இந்நிலையில் நடிகர் அருண் விஜய் தனது மனைவி மற்றும் மகள், மகனுடன் எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது.
இந்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் அருண் விஜய்யின் மகள் பூர்வியா இது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏனெனில் குட்டிப் பெண்ணாக இருந்த பூர்வி தற்போது பாவாடை தாவணியில் பெரிய பெண்ணாக வளர்த்துள்ளார்.
நடிகர் அருண் விஜய் தற்போது பார்டர், யானை, அக்னிசிறகுகள், பாக்சர் போன்ற பல படங்களில் நடித்து முன்னணி நடிகராகவும் பிஸியாக வலம் வருகின்றார்…