நடிகர் கமலை விட்டு கௌதமி பிரிய ஒரே காரணம் இது மட்டும் தான்… பல ஆண்டுக்கு பிறகு உண்மையை உடைத்த பிரபலம்..!!

சினிமா

திரையுலகில் நடிகர் கமல் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி இன்று வரை உச்ச நட்சத்திரமாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றார். தற்போது இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் இந்தியன் 2. இந்த திரைப்படத்தை இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றது.

மேலும் நடிகர் கமலுடன் நடிக்கும் பல நடிகைகள் பல சர்ச்சையில் சிக்கி இருக்கின்றார்கள். அப்படி இருக்கும் நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் பாலு என்பவர் சில தகவல்களை வெளியிட்டுள்ளார். ஒரு சமயத்தில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த கௌதமி மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

அதிலிருந்து மீண்டு வந்த பொழுது யாரும் இல்லாத நேரத்தில் மன அழுத்தத்தில் இருந்த பொழுது நடிகர் கமல் தான் அவருக்கு பல உதவிகளை செய்து வந்துள்ளார். அந்த சமயத்தில் இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்கள்.

அப்பொழுது பல கிசுகிசுகள் வந்தது. ஆனால் அதை எதையும் இவர்கள் இருவரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்கள். அதன் பிறகு திடீரென்று நடிகை கௌதமி தனது மகளின் படிப்பிற்காகவும் மகள் பெரிய ஆள் ஆகி விட்டார்.

இனி இப்படி இருந்தால் சரியாக இருக்காது என்று பேசி பிரிந்து விட்டார்கள். ஆனால் ஒரு சில ஊடகங்கள் இதனை தப்பான முறையில் பேசி வருவதாக அவர் சமீபத்தில் தெரிவித்துள்ளார்…