நடிகர் பிரபுவிற்கு மகன் இருப்பது மட்டும் தான் எல்லோருக்கும் தெரியும்.. ஆனால் அவரது மகளை யாரென்று தெரியுமா? இதோ திருமண கோலத்தில் பிரபுவின் மகள்.. மாப்பிளை யார் என்று தெரியுமா …?

சினிமா

நடிகர் பிரபுவிற்கு மகன் இருப்பது மட்டும் தான் எல்லோருக்கும் தெரியும்.. ஆனால் அவரது மகளை யாரென்று தெரியுமா? இதோ திருமண கோலத்தில் பிரபுவின் மகள்.. மாப்பிளை யார் என்று தெரியுமா …?
தற்போது சினிமாத்துறையில் எத்தனையோ நடிகர்கள் வந்தபோதிலும் அன்று முதல் இன்று வரை நடிப்பின் நாயகனாக இருப்பவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் .இவர் நடித்திராத கதாபாத்திரங்களே இல்லை எனலாம் .இந்நிலையில் இவருக்கும் கமலா என்பவருக்கும் பிறந்தவர் தான் இளையதிலகம் பிரபு .சிவாஜி அவர்களுக்கு பிரபு இளைய மகனாவார். திரைப்பட தயாரிப்பாளரான ராம்குமார் பிரபுவின் அண்ணனாவார். மேலும் பிரபுவிற்கு சாந்தி, செம்மொழி என இரண்டு அக்காக்கள் உள்ளனர்.

இவ்வாறான நிலையில் பிரபு புனிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு விக்ரம் பிரபு எனும் மகனும் , ஐஸ்வர்யா பிரபு எனும் மகளும் உள்ளனர். வாரிசு நடிகர்களின் தாக்கத்தை தமிழ் சினிமாவில் ஏற்படுதியர்க்கு இவர்களது குடும்பம்

ஒரு எடுத்துக்காட்டு எனலாம். இதற்கு ஏற்றார் போல் பிரபுவின் மகனான விக்ரம் பிரபுவும் பிரபு சலோமனின் கும்கி திரைபடத்தின் மூலம் திரைத்துறையில் கதாநாயகனாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக உள்ளார்.

இந்நிலையில் விக்ரம்பிரபுவும் லக்ஷ்மி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.இப்படி ஒரு நிலையில் பிரபுவின் இளைய மகளான ஐஸ்வர்யா கல்லூரி படிப்பை முடித்தவுடன் அவரது அக்கா மகனான குணாலுடன் 2009-ம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இதை தொடர்ந்து அவர்களது திருமணம் சமீபத்தில் சிவாஜியின் இல்லத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது.இதில் சினிமா பிரபலங்கான அஜித்,

நாசர், கமல்ஹாசன்,ஜோதிகா என அனனத்து நடிகர்களும் கலந்து கொண்டனர் … இந்த புகைப்படம் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.