நடிகர் விஜய் சேதுபதி-யுடன் ஜோடி சேர போகும் பிக்பாஸ் பிரபல நடிகை!! இணையத்தில் வெளியான புகைப்படங்களை பார்த்து வி ய ப்பான ரசிகர்கள் ..!!

சினிமா

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழின் காரணமாக, சின்னத்திரையை ஓரம் கட்டி விட்டு, வெள்ளி திரையில் வாய்ப்பு தேடி வந்த நடிகை ஷிவானி, தற்போது பிரபல முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிப்பதாக வெளியாகியுள்ள தகவல் இவருக்கு அடித்த ஜாக் பாட் வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

ஷிவானிக்கு சிறந்த அறிமுகத்தை கொடுத்தது சீரியல்கள் தான் என்றாலும், தற்போது வெள்ளித்திரை பட வாய்ப்புகளை கைப்பற்றுவதில் அதிக முனைப்பு காட்டி வந்தார். சில இயக்குனர்கள் இவரிடம் கதை கூறி வந்தாலும், மனதிற்கு பிடித்த கதையையும், நல்ல கருத்துள்ள படங்களையும் மட்டுமே தேர்வு செய்து நடித்து, முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என கண்ணும் கருத்துமாக இருந்தார்.

இதற்காக இவர், திரையுலகை சேர்ந்த சில நண்பர்கள் கூடவும் நிறைய ஆலோசனை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. எனவே தான் கடந்த சில மாதங்களாக, கண்ணை கட்டும் அளவுக்கு கவர்ச்சியை வாரி இறக்காமல், அளவான கவர்ச்சியை ரசிக்கும் படி காட்டி புகைப்படம் வெளியிட்டு வந்தாராம்.

முன்பை விட இவர், பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று வந்த பின்னர் வெளியிடும் புகைப்படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியிலும், நெட்டிசன்கள் மத்தியிலும் அதிகம் பார்க்கப்பட்டு, ரசிக்கப்பட்டு வருகிறது. அதே போல் இயக்குனர்கள் கூறி வரும் கதைகளை எல்லாம் ஏற்காமல், தனக்கு அழுத்தமான கதாபாத்திரமும், முக்கியமாக முன்னணி நடிகர்கள் படம் என்றால் மட்டுமே ஓகே சொல்லுவேன் என கூறிவந்தார். இதனால் கடந்த ஒரு வருடமாகவே வந்த வாய்ப்புகளையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு பொறுமையாக காத்திருந்தார்.

இவரது பொறுமைக்கும், காத்திருப்புக்கு தான் தற்போது அடித்துள்ளது ஜாக்பாட். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தில், ஷிவானி நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறாராம். இதுகுறித்த அதிகார பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை என்றாலும், விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது…