நடிகை காயத்ரி ரகுராமின் முதல் கணவர் இவர் தானா? வெளியான புகைப்படத்தை பார்த்து அட இந்த பிரபலமா என்று ஷாக்கான ரசிகர்கள்…!!

சினிமா

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீஸனில்  பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி இதில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். பிக்பாஸ் முதல் சீசனில் ஜூலிக்கு பிறகு அதிகம் வெறுக்கப்பட்டவர் காயத்ரி ரகுராம் தான். சீசன் 1 நிகழ்ச்சியில் இவர் ஓவியாவிடம் அடிக்கடி வம்பிழுத்து வந்ததால் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தார்.

மேலும் இவர் பிரபல நடன இயக்குனர் ரகுராம் மாஸ்டர் என் மகள். இவர் தனது 14 வயதில் இருந்தே சினிமா துறையில் இருந்து வருகிறார் 2002 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா மற்றும் பிரபு நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தமிழ் சினிமாவின் நடன இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் ரகுராம் மாஸ்டர்.

அதன் பின் இவர் நிறைய படங்களில் நடித்து வந்தார். பின் பட வாய்ப்புகள் குறைந்து வர 2006ம் ஆண்டு மென்பொருள் பொறியாளர் தீபன் சந்திரசேகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் 2008ம் ஆண்டு தனது கணவர் கொடுமை செய்வதாக கூறி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடினார். அதன் பின் 2010ல் விவாகரத்து பெற்றார்.

நடிகை காயத்ரி வானம், வை ராஜா வை, இது என்ன மாயம் போன்ற பல் படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார். பிக்பாஸ் முதல் சீசனிலும் கலந்துகொண்டு பலரது கோபத்தையும் பெற்றார். தற்போது அரசியலிலும் முழு ஈடுபாடு காட்டி வருகிறார். இந்த நேரத்தில் காயத்ரி திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது…