சினிமாவில் மக்கள் கொண்டாடிய பலர் இப்போது நிஜ வாழ்க்கையில் இணைந்துள்ளார்கள். அப்படி பிரபலங்களில் ரசிக்கப்பட்ட ஜோடிகளில் குஷ்பு மற்றும் சுந்தர்.சியும் உள்ளார்கள்.
குஷ்பு எப்போதும் தனது கணவரை அணைத்தபடி இன்ஸ்டாவில் பதிவிடும் புகைப்படங்களுக்கு எப்போதும் நல்ல கமெண்ட்ஸ் வரும்.
நடிகை ஒருபக்கம் அரசியல், நடன நிகழ்ச்சியில் நடுவராக இருப்பது என பிஸியாக இருப்ப சுந்தர்.சி படங்களில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறார்.
அண்மையில் சுந்தர்.சி ஒரு பேட்டி கொடுத்துள்ளார், அதில் அவர் பேசும்போது, என்னுடைய வாழ்க்கையில் குஷ்பு மட்டும் வரவில்லை என்றால் நான் நடிகை சௌந்தர்யாவுக்கு தான் ப்ரோபோஸ் செய்திருப்பேன்.
ஒரு வேளை அவரை திருமணம் செய்திருந்தால் என்னோடு உயிரோடு இருந்திருப்பார் என நான் பலமுறை குஷ்புவிடம் சொல்லியிருப்பதாக கூறியுள்ளார்.