நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாராக இருப்பவர். இவர் நடிப்பில் சமீபத்தில் நெற்றிக்கண் படம் திரைக்கு வந்தது.
இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது, அதை தொடர்ந்து நயன்தாரா செம்ம சந்தோஷமாக அடுத்தப்படத்திற்கு நடிக்க சென்றுவிட்டார்.
இந்நிலையில் நயன்தாரா பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடித்த போது யாருக்கு பேட்டி கொடுக்க கூடாது என்று இருந்தாராம்.
அந்த நேரத்தில் மூத்த நிரூபர் ஒருவர் பேட்டி கேட்டு வர, அப்படியே அவருடைய காலில் விழுந்து, சார் பேட்டி மட்டும் வேண்டாம் சார் என்று கூறிவிட்டாராம்.