நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவனுக்கு இன்று நிச்சயதார்த்தமா ..? கூடிய விரைவில் திருமணமா ..?இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து கடும் அ தி ர்ச்சியான ரசிகர்கள் ..!!
நயன்தாரா, கேரளா மாநிலத்தில் பிறப்பிடமாய் கொண்டுள்ள இவர், 2003-ம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர். இப்படத்தினை தொடர்ந்து இவர் 2005-ம் ஆண்டு ஐயா திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகி புகழ் பெற்றுள்ளார். தற்போது நயன்தாரா தென்னிந்திய திரைப்பட உலகில் “லேடி சூப்பர் ஸ்டார்” என்னும் புனைப்பெயரினை கொண்டுள்ளார்.
இப்படத்தினை தொடர்ந்து இவர் 2005-ம் ஆண்டு மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான சந்திரமுகி திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையில் பிரபலமாகியுள்ளார். இப்படத்தினை தொடர்ந்து தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகைகளுடன் நடித்து தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக புகழ் பெற்றுள்ளார்.
விக்னேஷ் சிவன் இந்திய தமிழ் திரைப்பட இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், நடிகர் என பன்முகன் கொண்டு தமிழ் திரையுலகில் பணியாற்றிவருகிறார். இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி சிலம்பரசன், தனுஷ், அனிருத் ஆகியவருடன் இணைந்து ஆல்பம் பாடல்களில் பணியாற்றியுள்ளார்.
விக்னேஷ் சிவன் ஏனைய குறும்படங்களுக்கு பின்னர் 2012-ம் ஆண்டு சிலம்பரசன் நடிப்பில் போடா போடி திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். இவர் நடிகராக 2007-ம் ஆண்டு வெளிவந்த சிவி என்னும் திகில் திரைப்படத்தில் சொல்லப்படாத கதாபாத்திரம் ஒன்றில் நடித்து திரையுலகிற்குள் நடிகராக அறிமுகமான இவர், 2014-ம் ஆண்டு தனுஷ் நடித்த வேலை இல்லா பட்டதாரி திரைப்படத்தில் நடித்து திரையில் பிரபலமானார்.
அதன்பின் தனிமையில் இருந்த நயனுக்கு ஆறுதலாக இருந்துள்ளார் விக்னேஷ் சிவன். இருவரும் அதன்பின்ன் காதலித்து ஜோடிகளாக ஊர்சுற்றி வந்தனர். எப்போது இருவருக்கும் திருமணம் என்று 5 ஆண்டுகளாக கேள்வி எழுந்து வந்தது.
இந்நிலையில் இன்று லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாராவும் விக்னேஷ் சிவனும் காளிகாம்பாள் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜையை செய்துள்ளனர். கோவிலுக்கு சென்றப்பின் இரவு இருவருக்கும் எளிய முறையில் நிச்சயம் நடைபெறவுள்ளதாகவும் இருவரின் குடும்பத்தினரின் முன்னிலையில் மோதிரம் மாற்றிக்கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
LadySuperstar Nayanthara & @VigneshShivN Visited #KaalikambalTemple today#NikilMurukan #NM pic.twitter.com/xZ0UXBWJCi
— Nikil Murukan (@onlynikil) March 11, 2022