நடிகை பானுப்ரியாவின் தங்கை பிரபல நடிகையா.? அட இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே.. இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

சினிமா

நடிகை பானுப்ரியாவின் தங்கை பிரபல நடிகையா.? அட இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே.. இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

பானுப்ரியா ஒரு இந்திய நடிகை, குச்சிப்புடி நடனக் கலைஞர் மற்றும் குரல் கலைஞர் ஆவார். 37 ஆண்டுகால வாழ்க்கையில், பானுப்ரியா 155 திரைப்படங்களில், முக்கியமாக தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார்.

பானுப்ரியா பல மொழிகளில் சுமார் 111-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் 55 திரைப்படங்களிலும், தமிழில் 40-க்கும் மேற்பட்டத் திரைப்படங்களிலும், 14 இந்தித் திரைப்படங்களிலும் மற்றும் சில மலையாள மற்றும் கன்னடத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ராஜமுந்திரியில் ஜனவரி 15, 1966 வருடம் பிறந்த இவர், இளமைக் காலம் முதல் சென்னையில் வசித்து வருகிறார்.அமரிக்காவைச் சேர்ந்த விருதுபெற்ற புகைப்படக்கலைஞரும், பிரபல பரதநாட்டிய கலைஞரான சுமதி கவுசலின் மகனுமான ஆதர்ஷ் கவுசல், என்பவரை பானுப்ரியா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள்.

இவர் தன்னுடைய 17-வது வயதில் நடிக்க ஆரம்பித்தார். இவருடைய முதல் தமிழ்த் திரைப்படம், மெல்ல பேசுங்கள் 1983-ம் ஆண்டு வெளியானது. தெலுங்கில் இவர் நடித்த முதல் திரைப்படம் சித்தாரா (1983). இவருடைய தங்கை நிஷாந்தி, (சாந்திப்பிரியா) என அறியப்பட்ட இவர்,

பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நிஷாந்தி எங்க ஊரு பாட்டுக்காரன் (1988) திரைப்படம் மூலமாக பிரபலமானார். நிஷாந்தி 2002-ம் ஆண்டு தொலைக்காட்சித் தொடரான ஆர்யமான்-லும், நடித்தார். பானுப்ரியாவின் மற்றொரு தங்கையான ஜோதிப்ரியாவும் தொலைக்காட்சிகளிலும், திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகை சாந்திப்ரியா நடிகர் சித்தார்த்ரேயை 1999 இல் திருமணம் செய்து கொண்டார். சித்தார்த் வி.சாநதராமின் பேரன் மற்றும் பாசிகர் மற்றும் வான்ஷ் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதோ அவரின்புகைப்படம்..