பிரபல விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்சசி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொரு சீசனாக நடக்கும் இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களை பலர் உள்ளார்கள்.
இதில் சத்ய பிரகாஷ், திவாகர், நித்யஸ்ரீ என இப்படி பலர் பேர் கொல்லிக் கொண்டே போகலாம். இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர்களில் ஒருவர் பூவையார். இவர் விஜய்யுடன் பிகில் படத்தில் ஒரு பாடலில் நடித்து அசத்தியிருப்பார்.
மேலும் சினிமாவில் பாடல்கள் பாடி ஜெயித்து வரும் இவர் தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த காரின் புகைப்படம் வெளியாக அனைவரும் இவரை பாராட்டி வந்தனர். பூவையார் வாங்கிய கார் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் (TATA Punch) கார் ஆகும்.
மேலும் இந்த கார் சுமார் 5.93 லட்சம் ரூபாய் முதல் 9.49 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறதாம். என்ற தகவல் வெளியாகியுள்ளது…
View this post on Instagram