நயன்தாரா – விக்னேஷ் சிவன் உறவு முறிந்தது !! மீண்டும் தனி மரமான நயன்தாரா ??

சினிமா

நயன்தாரா தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியான இவர் பெங்களூரில் பிறந்தவர். இவருக்கு ஒரு அண்ணன் உண்டு அவரது பெயர் லெனோ இவர் துபாய்யில் வாழ்ந்த வருகிறார். நயன்தாராவின் பெற்றோர் கேரளாவில் வாழ்ந்து வருகின்றனர்.

இவரின் படம் மனஸ்ஸிநாக்கரே என்ற மலையாள படம். அதன் பின் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆன முதல் படம் இயக்குனர் ஹரி இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான “ஐயா” படம் தான். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை தன் பக்கம் திரும்ப செய்தார். ஐயா ஆரம்பித்து இன்று தர்பார் வரை லேடிசூப்பர்ஸ்டார் பவர் இன்னும் குறையவே இல்லை.

திரையுலகிற்கு வருவதற்கு முன் நயன்தாரா கைரளி டிவியில் தொகுப்பாளராக வேலைபார்த்து வந்துள்ளார்.ஆனால் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜோடியாக தர்பார் படத்தில் நடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.

ஆனால், தனது காதலில் தற்போது மூன்றாவது முறையாக தோல்வி அடைந்துள்ளார் என்று சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. அது என்னவென்றால் சில தினங்களுக்கு முன்பு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கோவில் கோவிலாக சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றினர்கள்.

கடந்த வருட இறுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் சிறப்பாக சென்றுள்ளது, அதற்கான புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. கிறிஸ்மஸ் முடிந்தபின் புத்தாண்டிற்கு வெளிநாடு சென்றுள்ள நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.