நாமம் போட்டுகொண்டு சிரித்த முகத்தோடு அழகாக போஸ் கொடுக்கும் இந்தக் குழந்தை யார் தெரியுமா..?? இவர் தான் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவே கொண்டாடிய ஒரு பிரபல நடிகர்..!!

சினிமா வைரல் செய்திகள்

தமிழ்த் திரையுலகில் சாக்லேட் பாய் என்றால் நடிகர் மாதவனைச் சொல்லலாம். சாக்லேட் பாய் என்று எத்தனை நடிகர்கள் அழைக்கப்பட்டாலும் சாக்லேட் பாய்த் என்றால் அது மாதவன் என்று எல்லோருக்கும் நன்றாக தெரியும். காதல் சடுகுடு குடு..”என அலைபாயுதே படத்தில் அமுல்பேபியாக வருபவர் மாதவன். மீசை வைக்காத இவர் மீது அப்போது ஆசை வைத்தவர்கள் பலர்.

அதிகமான பெண் ரசிகர்களைப் பெற்றிருந்த மாதவன் செல்லமாக ‘மேடி” என அழைக்கப்பட்டார். இப்போது நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்துவருகிறார் மாதவன். அண்மையில் இவர் விஜய் சேதுபதியோடு சேர்ந்து நடித்த விக்ரம் வேதா, இறுதிச்சுற்று படங்கள் இவருக்கு நல்ல பெயர் எடுத்துக் கொடுத்தது. தற்போது மாதவன், இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கைக்கதையில் நடித்து வருகிறார்.

நடிகர் மாதவன் நடித்த ரன் திரைப்படம் இப்போது பார்த்தாலும் போர் அடிக்காமல் நகரும் கதைக்களம் கொண்டது. ஒருபக்கம் அமுல்பேபி ரோல் செய்தாலும் இன்னொரு புறத்தில் அன்பே சிவம், தம்பி உள்ளிட்ட அழுத்தமான படங்களையும் செய்து இருக்கிறார் மாதவன். ஆரம்பத்தில் டிவியில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிதான் இண்டஸ்ட்ரிக்கு வந்தார் மாதவன். நடிகர் மாதவனின் மகன் வேதாந்திற்கு இப்போது 15 வயது ஆகிறது. நடிகர் மாதவன் இப்போது தன் வயதுக்கு ஏற்ற பாத்திரங்களில் நடித்து வருகிறார்.