நாயகன் படத்தில் நடித்த சின்ன குழந்தையா இது.? அட இத்தனை நாட்களா இது தெரியாம போச்சே..? புகைப்படத்தை பார்த்து அட இந்த பிரபலமா என்று வியப்பான ரசிகர்கள் ..!!

சினிமா

தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான கதைகளை கொடுப்பதில் கைதேர்ந்தவர் மணிரத்தனம். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருக்கிறது. மத்தியில் வகையில் மணிரத்னம் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் நாயகன். இந்த படத்தில் கமலஹாசன், சரண்யா, ஜனகராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மும்பையில் தாதாவாக விளங்கிய வரதராஜ் முதலியாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்த படம் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் மூன்று தேசிய விருதையும், பல தனியார் விருதுகளையும் வாங்கி இருந்தது.

மேலும், இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக சாரா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வினோதினி. நாயகன் படத்தின் மூலம் தான் இவருக்கு பல படத்தின் நடிக்க வாய்ப்பு வந்தது என்று சொல்லலாம். அதனைத் தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல படங்களில் கதாநாயகியாகவும், குணச்சித்திர வேடங்களில் நடித்து இருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை வினோதினி அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் மணிரத்தனம் குறித்தும், பட வாய்ப்புகள் குறித்தும் பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து குறித்தும் அதில் அவர் கூறியது, மணிரத்தினம் இயக்கிய நாயகன் படத்தில் சிறுவயது சாராவாக நான் நடித்தேன். மும்பையில் தான் ஷூட்டிங் நடந்தது. அங்கு தங்கி நடித்தது எனக்கு மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது.

அந்தப் படத்திற்குப் பிறகு நான் மணிரத்தினம் சாரை நேரில் பார்த்ததே இல்லை. சுகாசினி மேடமை பார்க்கும்போது நான் நிறைய பேசி இருக்கிறேன். மணிரத்தினம் சாரை சந்தித்து, பேசி உங்கள் நாயகன் படத்தில் நான் நடித்தேன்! ஞாபகம் இருக்கிறதா?எனக் கேட்க வேண்டும். 16 வயதிலேயே நாயகியாக நடிக்க ஆரம்பித்தேன். பின் பல மொழி படங்களில் நடித்தேன். படங்களில் மட்டும் இல்லாமல் சின்னத்திரை தொடர்களிலும் நடித்தேன்.

திருமணத்திற்கு பிறகு ஒரு கட்டத்தில் குடும்பத்தை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு வந்து விட்டதால் சினிமாவில் இருந்து ஒதுங்க வேண்டியதாகி விட்டது. இது எல்லாப் பெண்களின் வாழ்க்கையிலும் இயல்பான இது அப்போதிருந்து இப்போது வரை எனக்கு வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால், என்னால் தான் நடிக்க முடியவில்லை. பின் கரு. பழனியப்பனின் பிரிவோம் சந்திப்போம் படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்தேன்.

அவரது சதுரங்கம் படத்திலும் நடித்து இருந்தேன். இடையில் எனக்கு நேரம் இல்லாததால் நடிக்க முடியாமல் போனது. இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு நேரம் அமைந்து கொஞ்சம் என் பிள்ளைகளும் வளர்ந்து விட்டார்கள்.

அதனால் படங்களில் வாய்ப்புகள் வந்தால் நடிக்கலாம் என்று இருக்கிறேன். எனக்கு பொருந்தும் வித்தியாசமான பாத்திரங்களில் திரைப்படங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறது. விரைவில் எல்லோரையும் திரையில் சந்திப்பேன் என்று கூறியிருந்தார்.