நீண்ட நாள் காதலியான மோனிகாவை கரம்பிடித்த நடிகர் கவின்!! வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள்…!!

சினிமா

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்து பிரபலமான நடிகர் கவின். மேலும் இவர் நட்புன்னா என்னானு தெரியுமா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்து கொண்டார்.

அதன் பின் வெளியான ‘லிஃப்ட்’, ‘டாடா’ போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் நடிகர் கவின் தனது நீண்ட நாள் தோழியான மோனிகா என்பவரை திருமணம் செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இவர்களது திருமணம் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறும் என செய்திகள் வெளியான நிலையில் இன்று இவர்களது திருமணம் நடந்துள்ளது. திரையுலகம் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் நடிகர் கவின் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

காமெடி நடிகர் புகழ் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். ரசிகர்களும் கவினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்…