கலைத்துறையில் முன்னனி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் வாரிசுகளும் படங்களில் கால் தடம் பதித்து வருகின்றனர்.அந்த வகையில் பல வாரிசு நடிகர்கள் தற்போது சினிமாத்துறையில் பிரபல ஹீரோக்களாக வலம் வருகின்றனர்.இளைய திலகம் பிரபு தொடங்கி விஜய்,சூர்யா,கார்த்தி,கௌதம் கார்த்திக்,விக்ரம் பிரபு என பல நடிகர்கள் வாரிசு நடிகர்களாக திரைத்துரையில் நுழைந்தனர்.
இந்நிலையில் பட்டிமன்ற நடுவரும் திமுக கொள்கை பரப்பு செயலாளராகவும் இருந்து வருபவர் திண்டுக்கல் ஐ லியோனி.இவர் பல வருடங்களாக தனது நகைச்சுவையான பேச்சால் பட்டிமன்ற பேச்சால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர். திண்டுக்கல் ஐ. லியோனி என்பவர் ஆசிரியர், மேடைப் பேச்சாளர், இலக்கியச் சொற்பொழிவாளர், நகைச்சுவை பட்டிமன்ற நடுவர். இவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்தவர்.
கிறித்துவ மதத்தை பின்பற்றுபவர். இவர் கங்கா கௌரி என்ற திரைப்படமொன்றில் நடித்துள்ளார். இவருக்கு 2010-ம் ஆண்டிற்கான கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
பட்டிமன்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் திண்டுக்கல் லியோனி. பல மேடை நிகழ்ச்சிகளில் பேசி வந்தவர் திமுக கட்சியின் நட்சத்திர பேச்சாளராக பல காலமாக இருந்து வருகிறது.
ஆளும் கட்சியினரை விமர்சிப்பதும், கேலி கிண்டல் செய்வதும் அவரின் பட்டிமன்ற நிகழ்ச்சியில் தவறாமல் இடம் பெறும் விசயம். தற்போது அவரின் மகன் லியோ சிவக்குமார் படத்தில் ஹீரோவாக அறிமுகமாக சஞ்சிதா ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறாராம்.
மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ இப்படத்தை தயாரிக்கிறாராம். ஆர். விஜயகுமார் தயாரிக்கும் இப்படத்தின் பட பூஜை நடைபெற்றுள்ளது. இதில் லியோனியின் மகள் மற்றும் மனைவி ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.