பத்திரப்பதிவு முடிந்து சந்தோஷத்தில் இருக்கும் பாண்டியன் குடும்பம் .. சந்தோசத்தத்தை கெ டுக்க நினைக்கும் ஜனார்த்தனன் ! இதோ ப ரப ரப்பான வீடியோ ..!!

சினிமா

பத்திரப்பதிவு முடிந்து சந்தோஷத்தில் இருக்கும் பாண்டியன் குடும்பம் .. சந்தோசத்தத்தை கெ டுக்க நினைக்கும் ஜனார்த்தனன் ! இதோ ப ரப ரப்பான வீடியோ ..!!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், புது இடத்தை பத்திரபதிவு செய்து முடிக்கின்றனர். பின் குடும்பத்தினர் அனைவரும் இடத்தை பார்த்து வீடு எப்படி கட்ட போகிறோம் என சந்தோசமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அதை பார்த்த மீனாவின் அப்பா கோபப்படுகிறார். பின் பழைய வீட்டில் இருந்து பொருள்களை கொண்டு வருகிறார்.

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், புது இடத்தை பதிவு செய்ய, பத்திர அலுவலகத்திற்கு மூர்த்தி, கண்ணன், கதிர், ஜீவா ஆகியோர் வருகின்றனர். அப்போது கதிர் அன்னைக்கே நான் வந்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது என சொல்கிறார். பின் கண்ணன் எல்லாம் நல்லதாக தான் முடிந்து இருக்கிறது என சொல்கிறார். பின் இடத்தை விற்பவர் வந்துவிட

எல்லாம் தயாராக இருப்பதாக மூர்த்தி சொல்கிறார். பின் உள்ளே செல்ல எல்லாம் தயாராக இருக்கிறது. நான்கு பேரும் கையெழுத்து போட இடம் இவர்களின் பெயருக்கு மாற்றப்படுகிறது.அதை நினைத்து நான்கு பேரும் சந்தோசப்படுகின்றனர். அப்போது அந்த பக்கமாக மீனாவின் அப்பா வருகிறார். அவர் குடும்பத்தில் அனைவரும் சந்தோசமாக இருப்பதை பார்த்து கோபப்படுகிறார்.

என்ன செய்தாலும் இவர்கள் சந்தோசமாக இருக்கிறார்கள் எப்படியாவது இவர்களின் நிம்மதியை கெடுக்க வேண்டும் என மீனாவின் அப்பா நினைக்கிறார். வீட்டை காலி செய்ய சொன்னால் பொருள்களை யார் எடுப்பா நான் அதை பாதுகாக்க முடியாது என சொல்லி அனைத்து பொருள்களையும் தூக்கி எறிகிறார். அப்போது மூர்த்தி அம்மா அப்பா புகைப்படம் கீழே விழுந்து உடைகிறது. தனம் அதை எடுக்க கையில் காயம் ஏற்படுகிறது. உடனே மீனாவின் அப்பாவை பார்த்து கதிர் மூர்த்தி முறைக்கின்றனர்.