பயமின்றி பனை மரம் ஏறும் 9 ஆம் வகுப்பு மாணவி… அப்பாவுக்கு இப்படி ஒரு உதவியா? நெகிழ வைக்கும் சம்பவம்…!!

Videos சினிமா

தற்போது இருக்கும் தலைமுறை பெண்கள் மிகவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொது வெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். அந்த வகையில் பெண்கள் விளையாட்டுத் துறையிலும் வேற லெவலில் அசத்துகின்றனர். அதிலும் அதெலெட்டிக் போன்ற போட்டிகள் தொடங்கி, கிரிக்கெட் வரை சர்வ சாதாரணமாக விளையாடி அனைவரையும் ரசிக்க வைக்கின்றனர்.

ஆணுக்குப் பெண் இளைப்பிள்ளை என பாரதி பாடிய பாடலுக்கு ஏற்ப இப்போது ஆண்களைப் போலவே பெண்களும் விளையாட்டிலும் வெற்றிகளைக் குவித்து வருகின்றனர். அதே போல் இன்று பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதித்து அசத்துகின்றனர். கடினமான உடல் உழைப்பிலும் ஆண்களுக்கு இணையாக களத்தில் இருந்து மிளிர்கின்றனர். கனரக வாகனங்களையும் மிக அழகாக ஓட்டி பெண்கள் அசத்துகின்றனர்.

மேலும் அந்த வரிசையில் விழுப்புரம் மாவட்டத்தில் மாணவி ஒருவர் தங்கைக்கு உதவும் நோக்கத்தில் பனை மரம் ஏறி, தானே தன் கல்விக்கான செலவுகளைக் கவனித்துக் கொள்கிறார்.  விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாண்டியன் என்னும் பனை ஏறும் தொழிலாளியின் மகள் ஹரீஸ்மா அரசுப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்துவருகிறார்.

இவர் 7 ஆம் வகுப்பு முதலே பனை மரம் ஏறி வருகிறார். துளியும் அச்சமின்றி பனையின் மேல் விறு, விறுவென ஏறி பாளையும் சீவி விடுகிறார். பள்ளி செல்வதற்கு முன் பள்ளி விட்டு வந்த பிறகும் பனை ஏறுகிறார். அரசு பனை கல்லுக்கு அனுமதித்தால் எங்கள் வேலை கொஞ்சம் குறையும். அரசு கல் தடையை நீக்க வேண்டும்.