பல கோடிகளில் நடந்த பில்கேட்ஸ் மகளின் பிரம்மாண்டமான திருமணம்.. மருமகன் இப்படிப்பட்டவரா? அட அவர் யாரென்று தெரியுமா? இதோ நீங்களே பாருங்க ..!!

வைரல் செய்திகள்

உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் பில் கேட்ஸ். இவரை பற்றி சமீபத்தில் பல பிரச்சனைகளைச் சந்தித்து வரும் நிலையில் அவருடைய மகளின் திருமனம் மிகப்பெரிய மகிழ்ச்சியை அவருக்கு அளித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு தான் பில் கேட்ஸ் அவருடைய மனைவி மெலிண்டா-வை விவாகரத்துச் செய்தார். மேலும், எகிப்து நாட்டைச் சேர்ந்த நாசரை பில்கேட்ஸ் மகள் பல ஆண்டுகளாகக் காதலித்துத் திருமணம் செய்துள்ளார்.

இந்த நிலையில், பில் கேட்ஸ்-ன் மூத்த மகளான ஜெனிபர் கேட்ஸ் நியூயார்க் நகரத்தில் இருக்கும் ஜெனிபர் சொந்தமாக வைத்திருக்கும் 124 ஏக்கர் குதிரை பண்ணையில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நாயல் நாசர் (Nayel Nassar) திருமணம் செய்துள்ளார்.

மனித உயிரியல் பாடத்தில் பட்டம்பெற்ற ஜெனிபர், சிறந்த குதிரையேற்ற வீராங்கனை ஆவார். ஆறு வயதில் இருந்தே குதிரையேற்றத்தில் ஆர்வம் காட்டி வரும் ஜெனிபர், அந்த விளையாட்டின் மூலமாகவே தற்போது தனது வாழ்க்கை துணையைவும் தேர்ந்தெடுத்துள்ளார்.

எகிப்து நாட்டைச் சேர்ந்த பெற்றோர்களுக்குப் பிறந்தவர் நாயல் நாசர். இவர் சிகாகோவில் பிறந்து குவைத் நாட்டில் வளர்ந்தார். இளம் வயதில் இருந்து குதிரையில் பயணம் செய்வதில் ஆர்வமாக இருந்த நிலையில் 30 வயதான நாயல் நாசர் equestrian விளையாட்டில் முன்னணி வீரர் ஆகத் திகழ்கிறார். சொல்லப்போனால் ஜெனிபர் கேட்ஸ்-ஐ நாயல் நாசர் சந்தித்ததே equestrian விளையாட்டின் போது தான்.

தொழில்முறை எகிப்திய குதிரையேற்ற வீரராக இருக்கும் நயலுக்கு ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கம் வெல்ல வேண்டும் என்பது கனவாக இருக்கிறது.

இதற்காக பயிற்சி எடுத்து வருகிறார். இதனைத்தொடர்ந்து, ஆங்கிலம், பிரஞ்சு மற்றும் அரபு மொழிகளில் சரளமாக பேசும் நயல், குதிரையேற்ற விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் போது தான் ஜெனிபரை சந்தித்து இருக்கிறார்.

விளையாட்டில் இவர்கள் இருவருக்கும் இருந்த காதல், மனதளவில் ஏற்பட, இருவரும் காதலித்து வந்தனர். 2017ம் ஆண்டு தங்கள் காதலை வெளிப்படுத்திய இருவரும், கடந்த ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் செய்தனர்.

மேலும், காதலரான நாயல் நாசர் விளையாட்டில் மட்டுமின்றி வர்த்தகத்திலும் உள்ளார். 2014-ல் கலிபோர்னியாவில் Nassar Stables LLC என்ற நிறுவனத்தை உருவாக்கி இயங்கி வருகிறார்.

இதேபோல் ஜெனிபர் கேட்ஸ்-ம் எவர்கேட் ஸ்டேபிள்ஸ் என்ற நிறுவனத்தையும் உருவாக்கினர். 25 வயதான ஜெனிபர் கேட்ஸ் மற்றும் 30 வயதான நாயல் நாசர் இருவரும் முதலில் இஸ்லாம் முறையிலும், அதன் பின்பு கிருத்துவ முறைப்படி என இரு முறை திருமணம் செய்துள்ளனர்.

இருவரின் திருமணம் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர்களின் இந்த திருமணம் சுமார் 2 மில்லியன் டொலர்(இலங்கை மதிப்பில் 40,09,03,000 கோடி ரூபாய்) செலவில் நடந்துள்ளது.

இதனிடையே, பில் கேட்ஸின் மகள் ஜெனிஃபர் பெயரில் 20 பில்லியன் டாலர்கள் சொத்துக்கள் இருக்கின்றன. விரைவில் தந்தையின் செல்வத்திலிருந்து தலா 10 பில்லியன் டாலர்களைப் பெற இருப்பதாக சொல்லப்படுகிறது.