பழம்பெரும் இந்திய நடிகர் அனுபம் ஷியாம் 63 வயதில் காலமான தகவல் திரையுலகினர்களிடையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல இந்திய நடிகரான அனுபம் ஷியாம் 63. இவர் முதல்வன் படத்தின் இந்தி ரீமேக்கான இந்தி ரீமேக்கான Nayak, slumdog millionaire, wanted, dil se உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.
இவர், அண்மையில் உடல் உள்ளுறுப்புகள் செயல் இழப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தற்போது அவர் காலமானார்.
மூத்த நடிகர் அனுபம் ஷ்யாம், கடந்த வாரம் சிறுநீரக தொற்று காரணமாக மும்பையில் உள்ள ஒரு நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பல உறுப்பு செயலிழப்பு காரணமாக காலமானார் என்று அவரது நண்பர் நடிகர் யஷ்பால் சர்மா கூறினார்.
மேலும், அவர் உயிர் நீத்த போது தனது இரண்டு சகோதரர்களான அனுராக் மற்றும் காஞ்சன் ஆகியோர் உடன் இருந்தனர் புதிய திண்டோஷி, MHADA காலனிக்கு காலையில் கொண்டு வரப்படும்.
இறுதிச் சடங்குகள் பிற்பகலில் நடைபெறும் என்று திரு சர்மா கூறினார். இந்நிலையில், இவரது மறைவிற்கு திரையுலகினர் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.