பழம்பெரும் தமிழ் திரைப்பட நடிகை உடல் ந லக்கு றைவால் கா ல மானார் .. சோ க த்தில் ஆ ழ் ந்த திரையுலகமும் ரசிகர்களும் ..!!

சினிமா

பிரபல திரைப்பட நடிகை ஜெயந்தி உடல்நலக்குறைவால் தனது 76வது வயதில் காலமானார்.

தமிழில் எதிர் நீச்சல், இருகோடுகள், பாமாவிஜயம், புன்னகை, வெள்ளிவிழா, மாப்பிள்ளை சார், செங்கோட்டை, அன்னை காளிகாம்பாள் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளவர் ஜெயந்தி.

இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார்.