பாட்டி பாசத்தில் உருகவைக்கும் குட்டி தேவதை .. ஒருநிமிசம் இந்த வீடியோவை பாருங்க … உருகிப் போவீங்க..!

வைரல் வீடியோ

குழந்தைகளின் உலகம் மிக, மிக அலாதியானது. வாயில் இருந்து தவற விடும் வார்த்தைகள்கூட குழந்தைகளால் அழகாகிறது. அதனால்தான் அவைகூட ரசிக்க முடிகிறது. இந்த உலகில் நாம் எத்தனை முறைப் பார்த்தாலும் சலிக்காத காட்சிகளில் ஒன்றுதான் குழந்தைகளின் செய்கைகள் ஒவ்வொன்றும் நம்மையும் அறியாமல் வெகுவாக ரசிக்க வைத்துவிடும்.

‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் குழந்தைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.

இங்கேயும் அப்படித்தான் ஒரு குட்டிக்குழந்தையிடம் இனிமேல் டிவியே பார்க்கக் கூடாது என அவரது தாயார் கறார் கண்டிஷன் போட்டுள்ளார். ஆனால் குட்டிக்குழந்தையோ தன் பாட்டியுடன் சேர்ந்து சீரியலாகப் பார்த்துள்ளார். இதைப் பார்த்ததும், அந்த குழந்தையின் அம்மா, ‘அப்பாயியை(பாட்டி) அடிக்கணும். உன்னை டிவி பார்க்கக் கூடாது என சொன்னால், பாட்டியோடு சேர்ந்து சன் டிவியில் சீரியலாக பார்த்திருக்கிறாய் என அதட்டினார்.

உடனே அந்தக் குட்டிக்குழந்தை நீ அடித்தால் பாட்டி தாங்க மாட்டார்கள். அடிக்காதே என தன் அம்மா செல்லமாகச் சொல்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடியாமல் ஓவென்று அழுகிறார். ஆனாலும் பாட்டி மேல் உயிரையே வைத்திருக்கும் இந்த செல்லப் பேத்தியின் பாசம் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.