‘பாண்டவர் பூமி’ படத்தில் நடித்த நடிகையா இது .? இப்போ எப்படி இருக்காங்க என்று தெரியுமா..? அட இவரது கணவர் இவர் தானா ..? இதோ ..!!
தமிழ் சினிமாவில் நடிகர் ராஜ்கிரண், நடிகர் விஜயகுமார், நடிகர் அருண்விஜய் நடிகர் சந்திரசேகர் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் குடும்ப கதையை மையமாக வெளிவந்த திரைப்படம் “பாண்டவர் பூமி”. இந்த படம் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதோடு இன்றளவும் மக்கள் மத்தியில் பெரிதளவில் விரும்பி பார்க்கபட்டு வருகிறது. இந்நிலையில் இந்தபடத்தில் கதாநாயகியாக நடித்த சமிதா நடித்திருந்தார். மேலும், அந்த படத்தில் இவரது நடிப்பு மக்கள் மத்தியில் பெரிதளவில் பாராட்டபெற்ற நிலையில்,
மேற்கொண்டு பல படங்களில் நடிப்பார் என பலரும் நினைத்து வந்த நிலையில் இந்த படத்திற்கு பிறகு அவருக்கு அவ்வளவாக பட வாய்ப்புகள் ஏதும் வராத நிலையில் தற்போது சின்னத்திரையில் சீரியலில் அம்மா மாமியார் போன்ற கேரக்டரில் நடித்து வருகிறார் இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சமிதா, எங்களுடைய குடும்பமே சினிமா துறையை சார்ந்தது இருப்பினும் எனக்கு சினிமா மீது அவ்வளவாக ஆர்வம் இல்லை ஒரு முறை சேரன் அவர்கள் என்னை பார்த்து “விண்ணோடும் முகிலோடும்” படத்தில் நடிகர் பிரசாந்துக்கு ஜோடியாக நடிக்க வைத்தார் இருப்பினும் அந்த படம் பாதியிலேயே நின்று போனது. அதன் பின்னர் இது நமக்கு வேண்டாம் என படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டேன்.
இப்படி இருக்கையில் மீண்டும் “பாண்டவர் பூமி” படத்தில் மீண்டும் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது இதனை தொடர்ந்து பட வாய்ப்புகள் வரும் என இருந்த நிலையில் சரிவர வாய்ப்புகள் ஏதும் வரவில்லை. அதன் பின்னர் சன் டிவியில் “சிவசக்தி” எனும் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க அதில் நடிக்கும் போது அந்த சீரியல் நடித்த ஸ்ரீ குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன்.
என் கணவரும் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ள போதும் அவருக்கு பிரபலத்தை கொடுத்தது என்னமோ சீரியல்கள் தான், என்று கூறினார். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது.