பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனின் தங்கையா இது …? அடேங்கப்பா , பார்க்க தேவதை போல இருக்காங்களே : புகைப்படத்தை பார்த்து உறைந்துபோன ரசிகர்கள்
தமிழ் தொலைக்காட்சிகளில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் மக்கள மத்தியில் வெகு பிரபலமாக உள்ளது. சொல்லபோனால் திரைப்படங்களை காட்டிலும் சீரியல்கள் தான் மக்கள் இடையே பெரிதளவில் பார்க்கபடுகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை மட்டும் ஒளிபரப்பாகி வந்த தொடர்கள் அதன் வெற்றியை தொடர்ந்து ஞாயிற்று கிழமைகளில் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு தனி வரவேற்பு தான்.
இந்த தொடர் சாதாரண குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தி ஒளிபரப்பாகி வருகிறது.அதிலும் இந்த தொடரில் வரும் கதிர் மற்றும் முல்லை கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மற்றும் இளசுகள் இடையே பெரும் வரவேற்பை பெற்றதோடு பாராட்டையும் பெற்று வருகிறது.
சினிமா என்றாலும் சரி சீரியல் என்றாலூம் சரி அதில் எப்படியும் காமெடி இருந்தே ஆக வேண்டும்.அந்த வகையில் இந்த தொடரில் கடைக்குட்டியாக வருபவர் தான் கண்ணன் என்கிற சரவண விக்ரம். 23-வயதான சரவண விக்ரம் தன் கல்லூரி படிப்பை முடித்து குறும்படங்களில் நடித்து வந்தார். இவர் 2017-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கண்மணி எனும் குறும்படத்தில் நடித்து பிரபலமானார்.
இதை தொடர்ந்து ரௌத்திரம் பழகு, என் உயிர் நண்பன், பகுத்தறிவு போன்ற பல குறும்படங்களில் நடித்துள்ளார்.இதன் மூலம் பிரபலமான சரவண விக்ரம் சின்னத்திரையில் அறிமுகமாகி சின்னதம்பி தொடரில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். இதனை தொடர்ந்து பாண்டியன்
ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்க ஒப்பந்தமானார். தனது இயல்பான நடிப்பு மற்று வெகுளியான முக பாவனைகளால் மக்கள மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். மேலும் சரவண விக்ரமிற்கு அழகான தங்கை ஒருவரும் உள்ளார் அவரது பெயர் சூர்யா.
இருவரும் இணைந்து சமூக வலைதளங்களில் பல டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். மேலும் சமீபத்தில் கூட இருவரும் ஒன்றாக ஒரு தனியார் யூடுப் சேனலுக்கு இண்டர்வியூ கொடுத்திருந்தனர். சரவண விக்ரம் தான் கடைக்குட்டி என்றால் அவருக்கும் ஒரு கடைக்குட்டி இருக்கிறார் போலும். மேலும் பேசன் டிசைனிங் படித்து வரும் அவரது தங்கையை விரைவில் சின்னத்திரை அல்லது வெள்ளிதிரையில் பார்க்கலாம் .