பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் பார்வையற்ற டீர்சராக நடித்த நடிகையா இது..?அட, ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிடங்களே .. இதோ நீங்களே பாருங்க ..!!

Uncategorized

தமிழ் சினிமா உலகில் சிவா மனசுல சக்தி திரைப்படத்தின் இயக்குனர் ராஜேஷின் இரண்டாவது படம் தான் பாஸ் என்கிற பாஸ்கரன். இது 2010 ஆம் ஆண்டு பாஸ்கரன். காதல் நகைச்சுவை திரைப்படம் ஆகும். இந்த படத்தில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். மேலும், இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது.இந்நிலையில் இந்த படத்தில் கண்ணு தெரியாத ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை அன்னபூரணி. இந்த படத்தில் கண்ணு தெரியாதவராக இருந்தாலும் ஒரு வேலை செய்து தெரியாதவராக விடாமுயற்சியுடன் போராடும் பெண்ணின் நிலையை பார்த்து ஆர்யா மனம் மாறுவார். பின் தான் நடத்தும் டுடோரியல் காலேஜ்க்கு அவரையே ஆசிரியராகவும் கொண்டுவருவார். நடிகை அன்னபூரணி அவர்கள் மதுரையில் பிறந்தவர்.

தமிழில் நகைச்சுவைப் படங்களுக்கு எப்போதுமே பெரிய அளவில் மார்க்கெட் உண்டு. தயாரிப்பாளரை இந்தப் படங்கள் எப்படியும் காப்பாற்றி விட்டுவிடும். அந்த வகையில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்த திரைப்படம் தான் பாஸ் என்கிற பாஸ்கரன். சிவா மனசுல சக்தி வெற்றியைத் தொடர்ந்து இந்தப்படத்தை இயக்கினார் ராஜேஷ்.

இந்தப் படமும், படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ஹிட் அ டித்தன. இதில் ஆர்யாவுக்கு ஜோடியாக நயன் தாரா நடித்திருந்தார். இந்தப் படத்தில் ஆர்யா, சந்தானம் காமெடி காம்போ பெரிய அளவில் வொர்க் அவுட் ஆனது.

இந்தப் படத்தில் பார்வையற்ற ஆசிரியை கேரக்டரில் அன்னபூரணி என்பவர் நடித்திருந்தார். அந்த பாத்திரம் தன்னம்பிக்கையை ஊட்டும் வகையில் இருக்கும்.

இந்த அன்னபூரணியின் சொந்த ஊர் மதுரை. இவர் சன், வசந்தம், விஜய், கேப்டன், ராஜ்டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். வணக்கம் மாப்பிள்ளை என்னும் படத்தில் சிறிய கேரக்டரிலும் நடித்துள்ளார். இதுவரை பாசமலர், சொந்த பந்தம், மோகினி, தேவதை, வள்ளி,

கல்யாண வீடு உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்துள்ளார். அம்மணி இப்போது கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் இதயத்தை திருடாதே என்னும் சீரியலில் ஹீரோயினியின் அண்ணியாக நடித்து வருகிறார். அடடே இந்த அம்மணி இவ்வளவு நடித்துள்ளாரா என நெட்டிசன்கள் ஆச்சர்யத்தில் உள்ளனர்.