பிக்பாஸில் இருந்து வெளியேறிய திருநங்கை நமிதாக்கு பதில் யார் உள்ளே வரபோகிறார் என்று தெரியுமா!! புகைப்படத்தினை பார்த்து அட இந்த பிரபலமா? என்று ஷா க் கான ரசிகர்கள் ..!!

சினிமா

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் 18 போட்டியாளர்களுடன் ஆரம்பித்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. தற்போது நமிதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியேறுவதாக தெரிகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே நடிகை சகிலாவின் மகளான தி ருநங்கை மிலா பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த சீசனில் தான் முதன் முறையாக தமிழ் பிக் பாஸில் இருந்து ஒரு திருநங்கை கலந்து கொண்டு இருக்கின்றார். இந்த செயலுக்காக பலரிடையே இருந்தும் பிக் பாஸ் குழுவிற்கு பாராட்டுக்கள் குவிந்து இருந்தன. ஆனால் சில தினங்களாக இந்த நிகழ்ச்சியில் இருந்து அவர் வெளியேறி இருக்கின்றார் என்று பலரும் பதிவுகளை போட்டு வந்தனர்.

அப்படி பலருமே பாராட்டுகளை தெரிவித்து வந்த போட்டியாளர் நமிதா இந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறி இருப்பது பலருக்குமே ஷாக்கிங்காக இருந்தது. என்ன காரணம் என்றும் எந்த ஒரு விளக்கமும் இல்லாமல் வெளியேறி இருக்கின்றார் நமிதா. மேலும் இன்னும் சில எபிசோடுகளில் அவர் தொடர்ந்து விட்டு பின்னர் வர வாய்ப்பில்லை என்றும் கூறுகின்றனர்.

இப்போது அடுத்து இவருக்கான இடத்தில் இன்னொரு போட்டியாளர் வந்தே ஆகா வேண்டிய நிலையில் பிக் பாஸ் வைல்ட் கார்ட் மூலமாக யாரை கொண்டு வர போகிறார என்ற ஆவல் பலருக்குமே இருக்கும் நிலையில் இப்போது அதுக்கான விடையும் கிடைத்து இருக்கின்றது. பலருமே பிக் பாஸில் திருநங்கை போட்டியாளரை கொண்டு வந்ததை பாராட்டியதால் மீண்டும் இன்னொரு திருநங்கை போட்டியாளரை தான் கொண்டு வர போகின்றனர் பிக் பாஸ் குழுவினர்.

அப்படி இப்போது அவர்கள் மீண்டும் சென்று சகிலாவின் மகள் மிளாவிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். நிகழ்ச்சி ஆரம்பத்திலேயே மிலா இந்த சீசனில் கலந்து கொள்ள வேண்டி இருந்த நிலையில், நமிதா ஏற்கனவே சென்று விட்டதால் மிலா அனுமதிக்கப்பட வாய்ப்பில்லை என்ற கருத்து நிலவி வந்தது. தற்போது தவிர்க்க முடியாத காரணத்தினால் நமிதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதால் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக மிலா வீட்டிற்குள் நுழைவார் என்று ரசிகர்கள் எதிர் பார்க்கின்றனர். மிலாவும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல ஆர்வமாக இருப்பதாகவே கருத்துக்களை தெரிவித்தார்.