பிக்பாஸ் சினேகன்க்கு விரைவில் திருமணமா?? தன்னை விட 16 வயது குறைவான பெண்ணை மணக்கிறார் .. சமூக இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ ..!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணிப் பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். 700-க்கும் மேற்பட்ட படங்களில் சுமார் 2500-க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார்.

இவருடைய பல பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகின்றன. மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு பிரபலமானார்.

தற்போது அரசியலிலும் ஈடுப்பட்டு வருகிறார். இதுவரை, திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்தார். தற்போது அவருக்குத் திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளனர்.

ஜூலை 29-ம் தேதி கன்னிகா என்ற பெண்ணைத் திருமணம் செய்யவுள்ளார் சினேகன். இதனை சினேகன் தரப்பிலிருந்து இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

ஆனால், சினேகனுக்குத் திருமணம் நடைபெறவிருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் கவிஞர் சினேகனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.