சின்னத்திரையில் மிகப்பெரிய அளவில் வெற்றிகண்ட நிகழ்ச்சிகளில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ்.
முதல் சீசனில் துவங்கி நான்காவது சீசன் வரை TRP மூலம் சின்னத்திரையில் பல சாதனைகளை பிக் பாஸ் நிகழ்ச்சி செய்துள்ளது.
ஆனால், பிக் பாஸ் சீசன் 4 கடந்த மூன்று சீசன்களை போல் இல்லாமல், ரசிகர்களிடம் பெரிதளவில் வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 5, மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் ரீச்சாக வேண்டும் என்று விஜய் டிவி குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்காக வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நடிகர், நடிகைகளை பிக் பாஸ் 5ல் கலந்துகொள்ள பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.
அதில் முதல் 8 போட்டியாளர் இவர் தான், என்று கூறி லிஸ்ட் ஒன்று இணையத்தில் லீக்காகியுள்ளது.
இதோ அந்த லிஸ்ட் :
இதில் 8-வதாக குறிப்பிட்டுள்ளவர் கடந்த சீசனில் கலந்துகொண்ட சம்யுக்தாவின் தோழி. இவருடன் சேர்த்து மொத்தம் 8 பேருடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
1. குக் வித் கோமாளி கனி
2. சுனிதா
3. பாபா பாஸ்கர்
4. ஷகீலாவின் மகள் மீலா
5. நடிகை ஐஸ்வர்யா
6. Youtube சென்சேஷன் ஜிபி முத்து
7. நடிகர் ஜான் விஜய்
8. ப்ரதாயினி
மேலும், இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.