வெள்ளித்திரையை காட்டிலும் சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தான் தற்போதைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. அந்த அளவிற்கு மக்கள் அந்த நிகழ்ச்சியின் மீது பலத்த வரவேற்பை வைத்துள்ளனர். இந்த வகையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் மக்களிடையே பெருமளவில் பார்க்கப்பட்டு வருவதோடு நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.இந்த நிலையில் இந்த சேனலில் கடந்த நான்கு வருடங்களாக பலரது மனதில் நீங்காத இடத்தை பிடித்ததோடு முதன்மை ரியாலிட்டி நிகழ்ச்சியாக ஒளிப்பரப்பானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த உலக அளவில் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது மேலும் இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களும் இந்த நிகழ்ச்சியில்
கலந்து கொண்டு மக்கள் மத்தியில் தங்களை அடையாளபடுத்தி கொள்வதோடு திரையுலகிலும் பல முன்னணி படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று வருகின்றனர்.
மேலும் இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பிரபலமடைய காரணம் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது பிரபல முன்னணி நடிகரான உலகநாயகன் கமல்ஹாசன் இதன் காரணமாகவே இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் அதிகம்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பல முன்னணி சினிமா பிரபலங்களும் பல புதுமுக நடிகர் நடிகைகளும் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் அறிமுகமாகி தங்களுக்கான பிரபலத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர்.
கமல் ஹாசன் தொகுத்து வழங்கி பிக் பாஸ் சீசன் 5 மிகவும் பிரமாண்டமாக துவங்கியது.இதில் 18 போட்டியாளர்கள் கலந்துகொள்ள, சில காரணங்களால் தீடீரென இந்த போட்டியில் இருந்து நமீதா மாரிமுத்து வெளியேறினார்.
இதனை தொடர்ந்து தற்போது 17 போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருக்க, இந்த வாரம் முதல் எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடந்தது.இதில் பிரியங்கா, நிரூப், ராஜு, அபிஷேக், அக்ஷரா, இமான் அண்ணாச்சி, உட்பட 15 போட்டியாளர்களும் நாமினேட் ஆனார்கள்.
இந்நிலையில், மக்களிடம் இருந்து குறைந்த வாக்குகளை பெற்று, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது அபிஷேக் என்று தகவல் வெளியாகியுள்ளது.இதோ பாருங்க..