பிரபல காமெடி நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் நடிகரை ஞாபகம் இருக்குறதா.? அட இவருக்கு இவ்வளவு அழகான குடும்பம் உள்ளதா? இதோ நீங்களே பாருங்க ..!!
தமிழ் சினிமாவில் ரஜினி கமல் சினிமாவிலும் இவரை பார்த்திருப்போம், விஜய் அஜித் சினிமாவிலும் இவரை பார்த்திருப்போம். 90ஸ் காலகட்டம் முதல் தற்போது உள்ள இளைய ரசிகர்கள் வரை இவரை தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். 1979ஆம் ஆண்டு மாந்தோப்பு கிளியே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.அதற்கு பிறகு ரஜினி கமல் படங்கலில் கவுண்டமணியின் நகைச்சுவை காட்சிகளில் துணை நடிகராக அறிமுகமானார்.
தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்த இவர், கடைசியாக 2006 ஆம் ஆண்டு சுந்தர் சி நடிப்பில் வெளியான தலைநகரம் படத்தில் நடித்திருந்தார். இவர் தமிழகத்தில் தான் பிறந்தார்
இவரின் உடல் மொழியினை வைத்து இவரை கேரளத்தை சேர்ந்தவர் எனவும் பலர் நினைத்ததுண்டு. 1936ம் ஆண்டு கும்பகோணத்தில் பிறந்தவர் நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன். 1949ம் ஆண்டு அவ்வையார் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு படிப்பில் ஆர்வம் காட்டவே சினிமாவில் நடிக்கவில்லை.
தமிழ் சினிமாவில் இவரின் கொசு தொல்ல தாங்கலப்பா காமெடிக்கும், வீட்டுல திங்க சோறு இருக்கா டா.. அப்பறம் என்னடா கிரிக்கெட் ஸ்கோர் வேணும்??
போன்ற காமேடிகளுக்கே பல ரசிகர்கள் உண்டு. இப்படி பட்ட நிலையில் கடந்த 2009ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி தொண்டை பு ற்று நோயால் கா லமானார். அப்போது அவருக்கு 73 வயது. ஓமக்குச்சி நரசிம்மன் சரஸ்வதி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு இவருக்கு, சங்கீதா, விஜயலட்சுமி மற்றும் நிர்மலா என்ற 3 மகள்கள் மற்றும் ஓம் காமேஷ்வரா என்ற ஒரு மகனும் இருக்கின்றனர். காமேஷ்வரா தற்போது சாமியாராக மாறிவிட்டாராம். சாய் பாபா, சித்தர்கள்,
இயேசுவை நேரில் சந்தித்திருக்கிறேன் என்று கூறியுள்ள அவர், அதன் பிறகு ஆன்மீகத்தை நானே நம்பத் தொடங்கினேன் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது சென்னை திருவல்லிக்கேணியில் காமேஷ்வரா சுவாமி வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.