பிரபல காமெடி நடிகர் லூஸ் மோகனுக்கு ஏன் அந்த பெயர் வந்தது தெரியுமா.? அட இத்தனை நாட்களா இது தெரியாமல் போச்சே..!! இதோ வெளியான தகவல் ..!!!

Uncategorized

பிரபல காமெடி நடிகர் லூஸ் மோகனுக்கு ஏன் அந்த பெயர் வந்தது தெரியுமா.? அட இத்தனை நாட்களா இது தெரியாமல் போச்சே..!! இதோ வெளியான தகவல் ..!!!
தமிழ் சினிமாவில் ஒல்லியான தேகம், கலைந்த முடி மற்றும் வாயில் பீ டி என தனித்துவமான ஸ்டைலை வைத்து தனக்கென ஒரு இடம் பிடித்தவர் லூஸ் மோகன். சென்னை தமிழ் இவருக்கு ஒரு அடையாளம் என்றே கூறலாம்.லூ ஸ் மோகனுக்கு காஸ்ட்யூம் என்றால் பனியன், பச்சை பெல்ட், கழுத்தில் கர்சிப் இதை வைத்துதான் தமிழ் சினிமாவில் பல படங்கள் நடித்துள்ளார். இவர் நடிக்கும் காட்சிகள் அனைத்திலுமே இந்த மாதிரியான காஸ்ட்யூம் தான் படத்தின் இயக்குனர்கள் வைத்திருப்பார்கள்.ஆரம்ப காலத்தில் 3 ரூபாய்க்கு நடிக்க வந்த லூஸ் மோகன் படிப்படியாக முன்னேறி 3000 ரூபாய்க்கு தனது நடிப்பு திறமைக்கு சம்பளமாக வாங்கியுள்ளார்.

“லூசு அண்ட் டைப்” என்ற நாடகத்தில் இவருடைய தந்தை நடித்ததால் மோகனுக்கு லூஸ்மோகன் என தமிழ் சினிமாவில் பெயர் வந்தது. 1944ஆம் ஆண்டு ஹரிச்சந்திரா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நுழைந்துள்ளார்.

அதன் பிறகு தொடர்ந்து அன்பளிப்பு, குழந்தைக்காக, கடவுள் மாமா மற்றும் கட்டிலா தொட்டிலா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ரோசாப்பூ.ரவிக்கைக்காரி மற்றும் சூரக்கோட்டை சிங்கக்குட்டி ஆகிய படங்கள் தான்

இவருடைய சினிமா வாழ்க்கையில் திருப்பு முனை என்றே கூறலாம்.மூன்று தலைமுறைகளாக காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்த நடிகர் என்றால் லூஸ் மோகன் தான். இவரது நடிப்பில் கடைசியாக 2002ஆம் ஆண்டு அழகி படத்தில் பாண்டிக்கு அப்பாவாக நடித்திருப்பார்.

தமிழ் சினிமாவில் ரிக்சா கேரக்டர் என்றாலே ரசிகர்கள் அனைவருக்கும் ஞாபகம் வருவது லூ ஸ் மோகன் தான். ஏனென்றால் இந்த கதாபாத்திரத்தில்

சிறப்பாக நடித்து புகழ் பெற்றார். அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் தனக்கென வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடம் பிடித்தார்.