பிரபல சீரியல் நடிகை திடீர் தற்கொலை… இறப்பதற்கு முன் வெளியிட்ட காணொளி… அதிர்ச்சியில் திரையுலகம்…!!

Videos சினிமா

மலையாள நடிகையான இவர் நடிப்பதற்கு முன் ரிவி தொகுப்பாளராக இருந்து வந்தார். ஸ்தீரி என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார்.35 வயதாகும் ரெஞ்சுஷா மேனன் தனது கணவர் மனோஜுடன் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.

நிதி நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட விசாரணை தற்கொலை என்று கூறினாலும், பொலிசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கொச்சியை பூர்வீகமாக கொண்ட இவர் சினிமாவிலும் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பல சீரியல்களில் தயாரிப்பாளராகவும், பரத நாட்டிய கலைஞராகவும் வலம் வந்த இவர் இறப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன் ஆனந்த ராகம் இணை நடிகை ஸ்ரீதேவி அனிலுடன் காமெடி காட்சி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இந்த காட்சியை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளதுடன், தங்களது இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sreedevi Anil (@anil_sreedevi)