திரையுலகை பொறுத்தவரை வெள்ளிதிரையைக் காட்டிலும் சின்னத்திரை தான் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சின்னத்திரையில் பல ரியாலிட்டி ஷோக்கள் நடந்தாலும் அந்த ஷோவை தொகுத்து வழங்கும் தொகுப்பாளரால் அந்த ஷோ ஹிட் ஆகும். அந்த வகையில் இதமான குரலால் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் அர்ச்சனா.
மேலும் இவர் தற்பொழுது விஜய் தொலைகாட்சியில் மிஸ்டர் அன் மிஸ்ஸஸ் சின்னித்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் இதற்கு முன் தனது கல்லூரி படிப்பிற்கு பின் பல முயற்சிகளை கடந்து சன் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பான காமெடி டைம் என்ற நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக அறிமுகமானார்.
அதன் பின் விஜய் டிவியில் கலக்குபோவது யாரு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அதன் பின் சில ஆண்டுகள் கழித்து சின்னத்திரை பிரபல தொலைகட்சியான ஜி தமிழ் தொலைகாட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அதன் பிறகு மீண்டும் விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் சீசன் 4 யில் கலந்து கொண்டார். அந்த சீசனில் கலந்த கொண்ட இவர் 10 நாள் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தார்.
மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இவர் பிக்பாஸ் வீட்டில் சென்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவார். என எதிர்பார்த்த நிலையில் அவர் வி மர்ச னங்க ளை யும் சந்தித்து மக்கள் மத்தியில் வரவேற்பு குறைய ஆரம்பித்தது. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது பல வி மர்சன ங்க ளை சந்தித்தாலும் தற்பொழுது விஜய் தொலைகாட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வருகிறார்.
தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அர்ச்சனா. இந்நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு வினித் முது கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு சாரா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் அர்ச்சனாவின் திருமணம் புகைப்படம் முதல் முறையாக வெளியாகிவுள்ளது. புகைப்படத்தை சமுக வளைதலங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்..