பிரபல நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு இவ்வளவு அழகிய பேத்தியா? இணையத்தில் வை ர லாகும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ ..!!

சினிமா

கடந்த 40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து வரும் செந்தில் தனது பேரக் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பழம்பெரும் காமெடி நடிகர் செந்தில் கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் 40 வருடங்களாக திரையுலகில் நடித்து வருகிறார்.

குறிப்பாக அவர் கவுண்டமணியுடன் இணைந்து நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் செந்தில் கடந்த 1984ஆம் ஆண்டு கலைச்செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அவருக்கு மணிகண்ட பிரபு மற்றும் ஹேமச்சந்திர பிரபு ஆகிய 2 மகன்களும் 2 பேரக்குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் செந்தில் வீட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மகன்கள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

நடிகர் செந்தில் தற்போது சுரேஷ் சங்கையா என்பவர் இயக்கி வரும் திரைப்படம் ஒன்றில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.