தமிழ் சினிமாவில் சாக்லெட் பாய் என நிறைய நடிகர்கள் கொண்டாடப்பட்டார்கள். அதில் ஒருவர் தான் நடிகர் ஸ்ரீகாந்த், ஆரம்பத்தில் ஹிட் படங்கள் கொடுத்து வந்த அவர் பின் கதை தேர்வில் வித்தியாசம் காட்டி வந்தார்.
அவர் நடித்த சில படங்கள் ஓட, ஒருசில வந்த சுவடே தெரியாமல் போய்விட்டது. பின் நடிகர் விஜய்யுடன் நண்பன் படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் மக்களின் நியாபகத்திற்கு வந்தார் ஸ்ரீகாந்த்.
இப்போது சில படங்கள் நடித்து வருகிறார், வரும் நாட்களில் அவரது படங்களின் அறிவிப்புகள் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பல பிரபலங்களின் தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன, நடிகர் ஸ்ரீகாந்த் குடும்ப புகைப்படமும் வெளியாகியுள்ளது.
அதைப்பார்த்த ரசிகர்கள் அட நடிகர் ஸ்ரீகாந்திற்கு இவ்வளவு பெரிய மகன், மகள் இருக்கிறார்களா என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.