பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாதியில் கலந்துகொண்டாலும், பெரும்பாலான ரசிகர்களைக் கவர்ந்தவர் ஹரிஷ் கல்யாண். பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைவதற்கு சில நாட்கள் முன்பு வரை நிகழ்ச்சியில் போட்டியாளராக நீடித்திருந்தார்.பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தபிறகு மற்ற பிரபலங்களுக்கு சினிமாவில் நல்ல வாய்ப்புகள் கிடைத்தது போலவே, ஹரிஷ் கல்யாணுக்கும் சூப்பரான வாய்ப்பு கிடைத்தது. ஹரிஷுக்கு ஜோடியாக பிக்பாஸ் ரைசா நடிக்க ‘பியார் பிரேம காதல்’ படம் உருவானது.சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். தொடர்ந்து பொறியாளன், வில் அம்பு
உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த அவர் கடந்த 2017-ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.
சினிமா பிரபலங்களில் சிலர் புதிய லுக்கிற்கு மாறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார்கள்.முதலில் சிம்பு, படு குண்டாக இருக்கிறார்
என விமர்சனங்கள் பெற்ற அவர் ஒரு கட்டத்தில் உடம்பை குறைத்தே ஆக வேண்டும் என்று போராடி இப்போது ஆளே புதிய நபர் போல் இருக்கிறார்.
உடல் எடை குறைக்க என்னென்ன செய்தேன் என மாநாடு பட புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கூறியிருந்தார்.இப்போது அவரை போல் ஒல்லியாக இருந்த நடிகர் ஹரிஷ் கல்யாண் மிகவும் பிட்டாக மாறி புதிய நபர் போல் காணப்படுகிறார்.
அவரின் பிட்டான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் முக்கியமாக ரசிகைகள் அட நம்ம சாக்லெட் பாய் ஹரிஷ் கல்யாணா இது என கமெண்ட் செய்து வருகின்றனர்.