பிரபல நடிகையின் மூன்று மாத குழந்தைக்கு இதயத்தில் பெரிய ஓட்டை… நடிகையின் குழந்தைக்கு நடந்த சோகம்… நடிகை லைவ் வீடியோவில் கண்ணீர்…!!

சினிமா

திரையுலகில் ஹிந்தி மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் நடித்து பிரபலமானவர் நடிகை பிபாஷா பாசு. இவர் நடிகர் விஜய்யின் சச்சின் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்திருப்பார் பிபாஷா நடிகர் கரண் சிங் குரோவர் என்பவரை 2016ல் திருமணம் செய்துகொண்டார்.

மேலும் கடந்த வருடம் நவம்பரில் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. அவருக்கு தேவி என பெயரிட்டனர். இந்நிலையில் தனது மகளுக்கு இதயத்தில் இருக்கும் பிரச்சனை பற்றி பிபாஷா கண்ணீருடன் பேசி இருக்கிறார்.தேவி பிறந்ததும் மூன்றாம் நாளில் அவளது இதயத்தில் இரண்டு ஓட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கபட்டது.

அந்த ஓட்டை தானாக சரியாகிறதா என அடிக்கடி ஸ்கேன் எடுக்க சொன்னார்கள். ஓட்டை பெரிதாக இருந்ததால் அதற்கு வாய்ப்பும் இல்லை என தெரிவித்தனர்.மூன்று மாதங்கள் ஆகும் போது ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்ய வேண்டும் என கூறினார்கள்.

மேலும் மகளின் எதிர்காலத்திற்காக இப்படி ஒரு முடிவை ஒப்புக்கொண்டேன். ஆபரேஷன் தியேட்டர் வெளியே 6 மணி நேரம் என் வாழ்க்கையே நின்று விட்டது போல இருந்தது. ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்து தற்போது தேவி நலமாக இருக்கிறார் என நடிகை பிபாஷா கண்ணீருடன் கூறி இருக்கிறார்..

View this post on Instagram

 

A post shared by Freedom To Feed (@freedomtofeed)