பிரபல முன்னணி இளம் நடிகரின் செம ஹிட்டான படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தும் நடிக்க மறுத்த பிரபல நடிகை..!! இப்போ ஃபீல் பண்ணி என்ன பிரயோஜனம்..!!

பிரபல முன்னணி இளம் நடிகரின் செம ஹிட்டான படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தும் நடிக்க மறுத்த பிரபல நடிகை..!! இப்போ ஃபீல் பண்ணி என்ன பிரயோஜனம்..!!

Tamil News

விஜய் தேவரகொண்டா மற்றும் ஷாலினி பாண்டே நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் அர்ஜுன் ரெட்டி. வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைத்த இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்திற்கு பின்னர் விஜய் தேவரகொண்டாவின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றது. அதிகளவிலான பெண் ரசிகைகள் அவருக்கு உருவாகினர். படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தமிழில் ஆதித்ய வர்மா என்ற டைட்டிலில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அர்ஜுன் ரெட்டி படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க பார்வதி நாயரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், அவர் நடிக்க மறுத்து விட்டதாகவும் தகவல் பரவி வந்தது. இதுகுறித்து ரசிகர் ஒருவர் பார்வதி நாயரிடம் சமூக வலைதளப் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த பார்வதி நாயர் அர்ஜுன் ரெட்டி படத்தில் நடிக்க மறுத்தது உண்மைதான் என கூறியுள்ளார். மேலும் “அது நல்ல படம். அந்த படத்தை நான் தவறவிட்டிருக்க கூடாது. ஆனால் எதுவாக இருந்தாலும் நமக்கு கிடைப்பது தான் கிடைக்கும். அதைவிட இன்னும் நிறைய நல்ல படங்கள் வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என கூறியுள்ளார்.