சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு ரசிகர்கள் பட்டாளம் என்பது சொல்லவே தேவையில்லை அந்த அளவிற்கு அவர்கள் தங்கள் நடிப்பு மற்றும் அழகான தோற்றத்தால் பல இளைஞர்களின் மனதை இன்றளவும் கொள்ளை கொண்டுதான் வருகிறார்கள். இந்நிலையில் நடிகைகளை காட்டிலும் நடிகர்களுக்குத்தான் பெருமளவு ரசிகர் பட்டாளம் உள்ளது எனலாம். இப்படி இருக்கையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சாக்லேட் பாய் என எல்லாராலும் செல்லமாக அழைக்கப்படும் மாதவன் அவர்களுக்கு எந்த அளவிற்கு ஆண்களின் ரசிகர்கள் உள்ளார்களோ அதை காட்டிலும் பல மடங்கு பெண் ரசிகர்கள் தான் அதிகம் எனலாம்.
இவர் முதன் முதலில் கடந்த 2000-ம் ஆண்டு பிரபல இயக்குனர்மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற காதல் திரைப்படமான அலைபாயுதே அப்டத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
மாதவன் தமிழ்நாட்டில் “மேடி” என்று செல்லமாக அழைக்கபடும் சாக்லேட் ஹீரோ. மணிரத்தினத்தின் “அலைபாயுதே” என்ற படத்தில் ஹீரோவா அறிமுகம் ஆகினர் மாதவன். தனது முதல் படமே மாபெரும் வெற்றியை கண்டார்.
முதல் படத்தில் நல்ல வரவேற்பு கிடைத்த மாதவன் கெளதம் வாசுதேவ் மேனன் அவர்களின் “மின்னலே” படத்தில் நடித்தார் அந்த படமும் மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று மாதவனை ஒரு சாக்லேட் ஹீரோ என்ற அளவுக்கு உயர்த்தியது. அதன் பின் காதல் கதைகள் என்றால் மாதவனை அணுகினர் இயக்குனர்கள். தமிழ் மட்டும் அல்லாமல் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார் மாதவன்.
அதன் பின் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்த மாதவன் ஆக்ஷ்ன் படங்களில் நடிக்க விருப்பப்பட்டு லிங்குசாமியின் “ரன்” மற்றும் சீமானின் “தம்பி” படங்களில் நடித்தார். சமீபத்தில் அவர் நடித்த “விக்ரம் வேதா” மாபெரும் வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் நடிகர் மாதவனின் மனைவி இன்று பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.அதனை முன்னிட்டு மாதவன் மகிழ்ச்சியாக புகைப்படத்தினை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.
குறித்த பதிவை பார்த்த ரசிகர்கள் ஒரே மகிழ்ச்சியில் லைக்குகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.இதேவேளை, மாதவனின் மனைவியின் புகைப்படமும் தற்போது தீயாய் பரவி வருகின்றது.