பிரபல முன்னணி நடிகர் ராமராஜனுக்கு என்ன நடந்தது..? இணையத்தில் வெளிவந்த தகவலை கேட்டு சோ கத் தில் மூழ்கிய ரசிகர்கள் ..!!

Uncategorized

கரகாட்ட நாயகன் ராமராஜனுக்கு உடல் நிலை மிக மோசமாக உள்ளதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். பொதுவாகவே பலரும் திரை உலகிலிருந்து விலகி ஓய்வில் இருக்கும் பல நடிகர்களின் உடல் நலம் குறித்து அவ்வப்போது போலியான தகவல்கள் சோசியல் மீடியாவில் வருவது வழக்கமான ஒன்றாக ஆகி விட்டது. சில விஷ கிருமிகள் இப்படி பல பிரபலங்களின் உடல்நிலை குறித்து மோ சமான வ தந்திகளை சோசியல் மீடியாவில் பரப்புவதே வாடிக்கையாகி வருகிறார்கள்.அந்த வகையில் தற்போது நடிகர் ராமராஜன் உடல்நிலை குறித்தும் பொய்யான தகவல் வந்துள்ளது. தமிழ் சினிமா உலகில் கரகாட்ட நாயகன் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது நாயகன் தான்.

தன்னுடைய கரகாட்டம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்தவர். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது.

பிறகு ராமராஜன் அவர்கள் சினிமாவிலிருந்து விலகி அரசியலுக்கு சென்றுவிட்டார். இவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் தற்போது உடல் நலம் பா திக்கப்பட்டு இவர் சோஷியல் மீடியாவில் வ தந்தி வந்துள்ளது. இந்த செய்தி அவருடைய ரசிகர்கள் மத்தியில் பே ரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ராமராஜன் தரப்பில் இருந்து இதற்கு விளக்கம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் அவர்கள் கூறியது, இது போன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். வரலாற்றுச் சரித்திரம் படைத்த கரகாட்டம் படத்தைப்போல் ராமராஜன் 100 வருடத்துக்கு மேல் நலமோடு இருப்பார்.

மக்கள் நாயகன் ராமராஜன் பற்றி தவறான வதந்திகளை பரப்பி வருகிறார்கள். ராமராஜன் அவர்கள் பூரண நலத்துடன் இருக்கிறார். அவர் இரண்டு படங்களுக்கு தனது கதையை தந்துள்ளார்.

இரண்டு அவர் 2 படங்களில் நடிப்பதற்கு தன்னை தயார்படுத்தி வருகிறார் என்பது தான் உண்மை. ராமராஜன் அவர்கள் உடல் நலத்துடனும் மன வலிமையுடனும் நன்றாக இருக்கிறார்.

மேலும், அவர் நடிக்க இருக்கும் படம் குறித்த தகவல் கூடிய விரைவில் வெளியாகும். அந்த துவக்க விழாவில் ராமராஜன் கலந்து கொள்வார் என்று குறிப்பிட்டிருந்தார்கள். தற்போது இந்த தகவல் சோஷியல் மீடியாவில் வெளிவந்தவுடன் ராமராஜன் ரசிகர்கள் கொஞ்சம் நிம்மதியில் உள்ளார்கள்.