தமிழ் சினிமா துறையில் 90களில் முன்னணி நடிகையாக கலக்கி வந்த நாயகி தான் நடிகை ராதிகா.இவரது முதல் படமான கிழக்கே போகும் ரயில் மூலம் பல ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர்.மேலும் அன்றைய கால கட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் போன்ற நடிகர்களுடன் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல சீரியல் தொடர்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.நடிகை ராதிகா கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் 50படங்களுக்கு மேல் நடித்துள்ளார்தமிழ் சினிமாவில் மட்டும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தாமல் இவர் கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி சினிமா துறையில் நடித்து அந்த மொழி சினிமா பிரியர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
மேலும் நடிகை ராதிகா அவர்கள் 1985ஆம் ஆண்டு பிரதாப் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.சில கருத்து வேறுபாடு காரணமாக ஒரு வருடதிலையே இருவரும் பிரிந்தனர்.
பிறகு வெளிநாட்டை சேர்ந்த ரிச்சர்ட் ஹார்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவருக்கும் பிறந்த மகளான ரேயான்,மேலும் இவர்கள் இருவரும் பிரிந்த பிறகு 2001ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சரத்குமார் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.
வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ராதிகா சரத்குமார்.இவரது தங்கை தான் நடிகை நிரோஷா ராம்கி. இவர் தமிழில் அக்னி நட்சத்திரம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.
இதன்பின் பல திரைப்படங்கள் நடித்து வந்த நடிகை நிரோஷா, நடிகர் ராம்கியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.சினிமா வாழ்க்கையிலிருந்து தள்ளியிருந்த நடிகை நிரோஷா சின்னப்பாப்பா பெரியப்பாப்பா சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.
பல சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்த இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக சின்னத்திரையில் நடிக்கவில்லை.இந்நிலையில் மீண்டும் புதிய சீரியல்
ஒன்றில் தனது சொந்த தயாரிப்பின் மூலம் நடிக்க வருகிறாராம் நிரோஷா.மேலும் இதில் புதிதாக கதாநாயகி ஒருவர் அறிமுகமாகவும் இருக்கிறார்.இதோ அந்த புகைப்படங்கள்..